mullangi curry: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் முள்ளங்கி குழம்பு... எப்படி செய்வது?
பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ள முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் காய்கறிகளுள் முக்கிய இடம் வகிக்கின்றது.
முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து காணப்படுவதால் மலச்சிக்கலுக்கு சிறந்த தெரிவாக காணப்படுகின்றது.
செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.
முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. அதனால் சீறுநீரக கல் ஏற்படுவதையும் சிறுநீரக பிரச்சினைகளையும் தடுக்க பெரிதும் உதவுகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட முள்ளங்கியை வைத்து அசத்தல் சுவையில் அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
உப்பு - 3/4 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி (1/2 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
முள்ளங்கி - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
தேங்காய் விழுது - 4 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தெவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரைவில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஊற வைத்த கடலைப் பருப்பையும் அதனுடன் சேர்த்து 1 நிமிடம் வரையில் கிளறி விட வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட்டு, முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்னறாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்பு தேங்காய் விழுது சேர்த்து கிளறிவிட்டு , குழம்புக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக வேகவிட வேண்டும்.
இறுதியில் கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்கினால், அவ்வளவு தான் அட்டகாசமாக சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முள்ளங்கி குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |