கொடிய நோய்களை அலறவிடும் மல்பெரி! நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டா என்ன நடக்கும்...எச்சரிக்கை!
பழங்கள் சருமத்திற்கும், உடலுக்கும் மிகவும் நல்லது. பழங்களில் பொதுவாகவே மருத்துவ பலன்கள் கொட்டி கிடக்கின்றது.
அப்படி ஓர் அருமருந்து மல்பெர்ரி. மல்பெர்ரி பழம் உலகின் எல்லா இடங்களிலும் ஏராளமாக கிடைக்கிறது.
கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு நன்கு பரிச்சயமான பழம்.
இந்த பழத்தின் பயன்கள், மருத்துவக் குணம் ஆகியவற்றை அறியாமல் உதாசீனப்படுத்தி வருகிறோம்.
அதனால் இன்று நாம் மல்பெரி பழத்தின் நன்மைகளை ஆராய்ந்து பார்க்கலாம்.
மல்பெரியில் கொட்டிக் கிடக்கும் சத்துகள்
சுவையில் திராட்சையைப்போல தித்திக்கும் மல்பெர்ரிப் பழங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற மிதவெப்ப மண்டல நாடுகளில் விளைகின்றன.
இந்தப் பழங்கள் சிவப்பு, கறுப்பு, கருநீலம் போன்ற நிறங்களில் காணப்படும். மல்பெர்ரியின் இலைகளை பட்டுப்புழு வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகளும் நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டவையே.
மல்பெர்ரியில் அதிகளவில் ஊட்டச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டின் ஆகியன உள்ளன.
100 கிராம் மல்பெர்ரியில் 43 கலோரிகள், 44 சதவிகிதம் வைட்டமின் சி, 14 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளன.
நன்மைகள்
மருத்துவ பலன்கள்
- மல்பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இது இதயப் பாதுகாப்புக்கு உதவக்கூடியது.
- புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து கேன்சரை குணப்படுத்தும் ஆற்றலும் மல்பெர்ரிக்கு உண்டு.
- ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
- உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
- ரத்தக்கட்டி, பக்கவாதம், ரத்தச்சோகை போன்றவற்றைத் தடுக்கும்.
- சீறுநீரகத்தைப் பலமாக்கும்.
- கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.
- மல்பெர்ரியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் காய்ச்சல், சளி, இருமலைக் குறைக்கக்கூடியவை.
- இது அறுவைசிகிச்சையால் ஏற்படும் காயங்களையும் வீக்கங்களையும் எளிதில் ஆற்றும் தன்மைகொண்டது.
- கெட்ட கொழுப்பைக் குறைத்து, நரம்பு வளர்ச்சியைப் பலப்படுத்தும்.
- உணவு செரிமானத்துக்கு உதவி செய்யும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- மல்பெர்ரி பழரசத்தைத் தொடர்ந்து பருகிவந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.
- கண் எரிச்சல் குணமாகும்.
- வெள்ளை மல்பெர்ரிகளில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் டைப் -2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன் படுத்தப்படும் மருந்துகளை ஒத்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அழகு சேர்க்கும் மல்பெர்ரி
மெலனின் உற்பத்தியைச் சீராக்கி, சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் வயதான தோற்றத்தைத் தடுத்து, உடலும் முகமும் இளமையாக காட்சிதர உதவும்.
தலைமுடி ஆரோக்கியமாக, நன்கு வளர உதவும். கீமோதெரப்பி சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் தலைமுடி இழப்பைத் தடுத்து, மீண்டும் வேரிலிருந்து முடி வளரச் செய்யும்.
இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், தலைமுடிக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளைக் குறைக்கலாம். இளநரையைத் தடுத்து, முடியின் நிறம் மங்காமல் வைத்துக்கொள்ளவும் மல்பெர்ரி உதவுகிறது.
யாரெல்லாம் சாப்பிட கூடாது?
கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது வெள்ளை மல்பெரி பழங்கள் உட்கொள்வது பாதுகாப்பானதா என்பது பற்றி போதுமான ஆதாரங்கள் இல்லை.
வெள்ளை மல்பெரி நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக சொல்லப்படுகிறது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் மல்பெரி பழம் சாப்பிடும் பொழுது இரத்தச் சர்க்கரை அளவை கண்காணித்து கொள்ள வேண்டும்.