முலைப்பால் தீர்த்த நீரின் மர்மம்! திருவண்ணாமலை ரகசியம்
தாய்ப்பாலுக்கு நிகராக பல்வேறு மருத்துவ மூலிகைகள் கொண்ட தீர்த்தமாக கருதப்படுகிறது முலைப்பால் தீர்த்தம்.
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருமே இங்கு வந்து தீர்த்தத்தை கொண்டு செல்கின்றனர்.
இதற்கான காரணம் என்ன? இவ்வளவு மகிமை ஏன்? என்பதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பஞ்சபூதங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருவது வழக்கமே.
இங்கிருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது முலைப்பால் தீர்த்தம்.
மலையின் உச்சியில் உள்ள மூலிகை மரங்கள், செடி மற்றும் கொடிகள் மற்றும் பாறை வழியே முலைப்பால் தீர்தத்துக்கு தண்ணீர்வந்து சேர்கிறது.
பார்ப்பதற்கு பால் போன்றே காணப்படுவதால் இந்த பெயர் வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தீர்த்த நீர் சுத்தமானதாகவும் அதேசமயம் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் காணப்படுகிறது.
இதனால் பலநோய்கள் குணமாகிறது, கோவிலுக்கு வரும் பக்தர்களும் இந்த நீரை தண்ணீர் போத்தல்களில் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.