ஆத்தாடி... மகனுக்காக துபாயில் அம்பானி வாங்கிய விலையுர்ந்த சொகுசு பங்களா; எத்தனை கோடி தெரியுமா?
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி துபாயில் வாங்கியிருக்கும் சொகுசு பங்களா பற்றிய தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, சமீபத்தில் தனது நிறுவன பொறுப்புகளை தனது மகன் ஆகாஷ் அம்பானிக்கு கொடுத்திருந்தார்.
விலையுர்ந்த பங்களா
இந்த நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் துபாயில் சொகுசு வில்லா ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே, துபாயில் வெளிநாட்டு மக்கள் குடியேறுவதை அதிகரிக்கும் வகையில், பல திட்டங்களை துபாய் அரசு செயல்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு கோல்டன் விசாவை துபாய் துணை தலைவருமான ஷேக் முகமது அறிமுகப்படுத்தியிருந்தார்.

இதன் மூலம் உலகளவில் தொழிலதுபர்கள் என பல துறைகளில் இருந்து விளங்குபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதேப்போல், துபாயில் உள்ள சொகுசு வில்லாக்களை வெளிநாட்டினருக்கு விற்கவும் ஆர்வம்காட்டி வந்தது துபாய் அரசு.
கோடி ரூபாய்
அந்த வகையில் தான் துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை முகேஷ் அம்பானி வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக அவர் 80 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக் பூங்காவை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது.
தற்போது, துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை அம்பானி தனது மகன் ஆனந்திற்கு வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.