விலை உயர்ந்த ஜெட் விமானத்தை சொந்தமாக்கிய அம்பானி- எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வாங்கிய விமானத்தின் விவரங்கள் நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமாக இருப்பவர் தான் முகேஷ் அம்பானி.
இவர், ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் மிகப்பெரிய செல்வத்திற்காக பிரபலமானவராக அறியப்படுவர்.
அம்பானி வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் உலக மக்களின் கவனமே அங்கு அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது தான இருக்கும்.
அந்த வகையில், தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் ஈர்க்கக்கூடிய சேகரிப்பையும் முகேஷ் அம்பானி வைத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
அப்படி, முகேஷ் அம்பானி வாங்கிய விலையுயர்ந்த ஜெட் விமானத்தின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
போயிங் 737 MAX 9 விமானம்
இந்தியாவில் விலை உயர்ந்த ஜெட் ஒன்றை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். முதல் போயிங் 737 MAX 9 ஐ விமானம் தற்போது இந்தியாவில் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அதி நவீன முறையில் தயாரிக்கப்பட்ட இந்த ஜெட் நீண்ட தூரம் செல்லக் கூடியது.
இதனை வணிக நோக்கத்திற்காக வாங்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போயிங் 737 MAX 9 விமானத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள EuroAirport Basel-Mulhouse-Freiburg (BSL) நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளார். இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு சோதனையோட்டமும் விடப்பட்டது.
கடந்த வருடம் ஏப்ரல் 13, 2023 சுவிட்சர்லாந்தில் இருந்தது. பின்னர் அங்கு வைத்து புதிய அப்டேட்கள் கொடுக்கப்பட்டு பின்னர் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. இந்தியாவிற்கு விமானத்தை கொண்டு வருவதற்கு முன்னர் ஜெனிவா மற்றும் லண்டன் லூடன் விமான நிலையங்களில் ஆறு சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் கடந்த ஆகஸ்ட் 27, 2024 அன்று, போயிங் 737 மேக்ஸ் 9 தனது இறுதிப் பயணத்தை பாசலில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விமானம் 9 மணி நேரத்தில் சுமாராக 6,234 கிலோமீட்டர்களைக் கடந்தது.
இந்தியாவிற்கு கொண்டு வந்தவுடன் விலையுயர்ந்த ஜெட் விமானமாக அனைவரும் பார்க்கிறார்கள். அம்பானியின் புதிய விமானம் தற்போது டெல்லி விமான நிலையத்தில் சரக்கு முனையத்திற்கு அருகில் உள்ள பராமரிப்பு முனையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜெட்டின் விலை எவ்வளவு?
இந்த ஜெட் விமானத்தை மும்பையிலுள்ள ரிலையன்ஸ் தலைமையகத்திற்கு விரைவில் கொண்டு செல்ல இருக்கின்றது. போயிங் 737 மேக்ஸ் 9 உலகின் மிக விலையுயர்ந்த ஜெட் இரண்டு CFMI LEAP-18 இன்ஜின்களால் இயக்கப்படுகிறது.
இந்த விமானம் “ MSN எண் 8401” மற்றும் ஒரே விமானத்தில் 6,355 கடல் மைல்கள் (11,770 கிலோமீட்டர்) பயணிக்கும் திறன் கொண்டது.
போயிங் 737 MAX 9 இன் அடிப்படை விலை $118.5 மில்லியன் என்கிறார்கள். அதில் கேபின் ரெட்ரோஃபிட்டிங் மற்றும் உட்புற மாற்றங்களுக்கான செலவுகள் அடங்காது.
நீண்ட தூர பயணம் செய்யும் இந்த வணிக ஜெட் விமானத்திற்காக அம்பானி குடும்பம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ததாக சொல்லப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |