அம்பானி வீட்டில் இருக்கும் தங்க கோவில் பற்றி தெரியுமா?
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இல்லமான ஆண்டிலியா கோவில் குறித்து பலரும் அறியாத சுவாரசிய தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு Nறு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து 13ம் தேதி சுப ஆசிர்வாத நிகழ்வும், 14ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றது.
முகேஷ் அம்பானியின் வீடான ஆண்டிலியா 4 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதுடன், 600 பேர் இங்கு பணியாற்றுவதாக கூறப்படுகின்றது.
இந்த பிரம்மாண்ட வீட்டில் கோவிலுக்கு அதிகமாக இடம் கொடுத்துள்ளார்களாம். ஆண்டிலியாவில் உள்ள கோவிலில், சிலைகள் முதல் கதவுகள் மற்றும் அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளியால் மட்டுமே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனுடன், கடவுள் சிலைகளிலும் வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அம்பானி குடும்பத்தில் கடவுள் நம்பிக்கை அதிகம் என்பதால், எப்பொழுதும் பூஜை, யாகம் மற்றும் ஹவனம் போன்ற சடங்குகளை எந்தவொரு நல்ல காரியத்திற்கும் முன்பு செய்துவிடுவார்களாம்.
சிலையில் வைர கற்கள்
நீத்தா அம்பானி அடிக்கடி இங்கு நேரத்தை செலவிடுவது அவருக்கு அமைதியை அளிக்கிறது. இந்த வீட்டை சிகாகோவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் பெர்கின்ஸ் என்பவர் வடிவத்துள்ளார்.
ஆஸ்திரேலியா கட்டுமான நிறுவனமான லாக்டன் ஹோல்டிங் என்பவரால் 2010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்டிலியா வீடு, 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்ச்சியையும் தாங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உண்மையில், நீத்தா அம்பானிக்கு அரியவகை வைரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது கோவிலை சிறப்பிக்கும் வகையில் விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |