மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிட மறந்துடாதீங்க!
பொதுவாகவே மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் மிகவும் சோர்வாக உணர்வார்கள்.
மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் ஹேர்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, மருத்துவ ரீதியாக டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படுகிறது.
இது மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாக ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை. ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும், உடல் அமைப்பு மற்றும் மாதவிடாய் கால வலிகளும் மாறுபடக்கூடும்.
மேலும் இந்த காலத்தில் மூட் ஸ்விங்ஸ், வயிற்று வலி, தூக்கமின்மை, மோசமான மனநிலை போன்றவை பலருக்கும் ஏற்படும். இந்த நேரத்தில் பெண்களுக்கு மன அழுத்தமும் அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த காலத்தில் பெண்களுக்கு உணவின் மீதான விருப்பம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் மாதவிடாய் காலத்தில் தான் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளைச் உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
ஆரோக்கியமான உணவுகள் மற்றும் நீர்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் விரும்பத்தகாத அறிகுறிகளைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்
பழங்கள் : மாதவிடாய் நேரங்கயில் பெண்கள் அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் இரண்டு அல்லது மூன்று பழங்களையாவது நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பழங்கள் புத்துணர்ச்சியூட்டவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றத்தை சீர்படுத்த்துவதில் பழங்கள் சாப்பிடுவது பெரிதும் துணைப்புரியும்.
இஞ்சி : மாதவிடாயின் போது ஏற்படும் வலியைக் குறைப்பதற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை சூடான இஞ்சி டீயை பருகுவது பலனளிக்கும். இது வயிற்றுத் தசைப்பிடிப்புகளைக் குறைக்கவும் மாதவிடதயின் போது ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கவும் துணைப்புரியும்.
மேலும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க இஞ்சியை உணவில் நேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பருப்புகள் மற்றும் பீன்ஸ்: வகைகளை மாதவிடாய் சமயத்தில் எடுத்துக் கொள்வதனால் அச்சமயத்தில் ஏற்படும் இரத்த இழப்பானது புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்த இவை மூலம் ஈடு செய்யப்படும். புரத உணவுகளை அதிகம் சாப்பிடுவது ரத்த போக்கினால் ஏற்படும் சோர்வை குறைப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.
மஞ்சள் : அதிக அளவில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ள மஞ்சளை பயன்படுத்துவதனால் கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பது மட்டுமின்றி வயிற்று வழியை போக்கக்கூடும். மேலும் அந்தரகப் பகுதிகளில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் தொற்றுக்களை நீக்கபெரிதும் துணைப்புரியும்.
யோகர்ட் அல்லது தயிர் : மாதவிடாய் சமயத்தில் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. இதனைத் தவிர்க்க யோகர்ட் அல்லது தயிர் சாப்பிடுவது நல்லது. அதேபோல், யோகர்ட் எடுத்துக் கொள்வது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |