Breaking; தொடர் தோல்வி... கேப்டன் பதவியை தோனியிடமே ஒப்படைத்த ஜடேஜா!
ஐபிஎல் தொடரில் சென்னை அணி பின்னடைவை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.cஇது சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
தொடர் தோல்வி
இதுவரை சென்னை அணியில், சிறப்பாக தோனி செயல்பட்டு வந்தார். ஆனால் ஜடேஜா கேப்டன் பதவிக்கு பின் சென்னை அணி பீல்டிங் முதற்கொண்டு சொதப்பி வருகிறது.
ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி - மகிழ்ச்சியில் ரோகித் சர்மா!
அணியின் முடிவு
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை விட்டு ஜடேஜா விலகியுள்ளார் , கேப்டன் பதவியை மீண்டும் டோனியிடம் ஒப்படைத்துள்ளார் .

மேலும், தனது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த ஜடேஜா இந்த முடிவை எடுத்துள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால், டோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாகிறார். இந்த சீசனில் மோசமாக விளையாடி வரும் சென்னை அணி டோனியின் தலைமையில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்