ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி - மகிழ்ச்சியில் ரோகித் சர்மா!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியுடன், வெற்றியே பெறாத மும்பை அணி மோதியது.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் , படிக்கல், களமிறங்கினர்.
அணியின் ஸ்கோர் 27 ரன்னாக இருந்தபோது படிக்கல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கேப்டன் சாம்சன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு வந்த டேரில் மிட்செல் பட்லருடன் இணைந்து நிதானமாக விளையாடினார்.டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழக்க, நிலைத்து நின்று ஆடிய பட்லர், அரைசதம் அடித்தார் அவர் மும்பை அணியின் ஹிரித்திக் ஷோக்கீன் வீசிய ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் பறக்க விட்டார் .
Breaking; தொடர் தோல்வி... கேப்டன் பதவியை தோனியிடமே ஒப்படைத்த ஜடேஜா!
மும்பை அணியின் முதல் வெற்றி
தொடர்ந்து விளையாடிய அவர் 52 பந்துகளில் 67 ரன்கள், எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது .
இதனை தொடர்ந்து 159 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, ஆரம்பத்தில், விளையாடி ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன், தடுமாற, வழக்கம் போல் ரோகித் 2 ரன்களில் வெளியேறினார்.
இஷான் கிஷன் 26 ரன்கள் அடிக்க, சூர்யகுமார் யாதவ் 51 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து திலக் 35 ரன்கள் அடித்து வெளியேற, கடைசியாக டிம் டேவிட் 20 ரன்களை விளாச டேனியல் சாம்ஸ் சிக்ஸர் அடித்து, வெற்றி பெற வைத்துள்ளார்.
இதனால், மும்பை அணி 8 தோல்விக்கு பின்னர் முதல் வெற்றி பதிவு செய்துள்ளது. ரோகித் சர்மாவின் பிறந்த நாளில் முதல் வெற்றி அந்த அணிக்கு ஆறுதலை அளித்துள்ளது.
First win in the bag - Congratulations to #MI who have beaten #RR by 5 wickets ??#RRvMI | #TATAIPL | #IPL2022 pic.twitter.com/MDPru1K4pj
— IndianPremierLeague (@IPL) April 30, 2022