விவசாயத்திற்காக புதிய தொழிலில் களமிறங்கிய தோனி - கொண்டாடும் ரசிகர்கள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் முடிந்த கையோடு தோனி தனது வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். பல துறைகளில் வர்த்தகத்தை தொடங்கி இருக்கும் இவர் சென்னையில் இயங்கும் நிறுவனம் ஒன்றில் தோனி இணைந்திருக்கிறார்.
அதன்படி, ட்ரோன் ஸ்டார்ட்அப் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதில் நிறுவன பங்குதாரர்களில் ஒருவராகவும் எம்எஸ் தோனி இருப்பார் என்றும் ஜூன் 6 இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தோனி புதிய தொழிலில்
ட்ரோன்களை பயன்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதில் தோனி முதலீடு செய்திருக்கிறார்.
ஆனால் எவ்வளவு தொகை என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. இதுகுறித்து, தோனி தெரிவிக்கையில், “ கருடா ஏரோஸ்பேஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்கள் வழங்கும் தனித்துவமான ட்ரோன்களுடன் வளர்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.