கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய தோனி - வைரலாகும் வீடியோ!
சிஎஸ்கே அணியின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார் சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி.
கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய தோனி
நேற்று இரவு அகமதாபாத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் நடைபெற்றது.
இப்போட்டியில் குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பாட்டம் செய்த குஜராத் அணி 214 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி மாபெரும் சாதனைப் படைத்தது.
ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றி மாபெரும் சாதனைப் படைத்துள்ளது.
இந்தியா முழுவதும் தோனி ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். பலர் சிஎஸ்கே அணிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் வகையில் ஐபிஎல் கோப்பை கொண்ட கேக்கை கோப்டன் தோனி வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
To all the MS DHONI fans, good morning and good night.
— Manoj Dimri (@manoj_dimri) May 30, 2023
Thanks for all the love in Chennai and Ahmedabad ❤️??#CSKvsGT#CSKvGT#MSDhoni? #IPL2023Final pic.twitter.com/A4ZQ6iyDZk