15வது திருமண நாளைக் கொண்டாடிய MS தோனி-சாக்ஷி: குவியும் வாழ்த்துக்கள்
MS தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷியும் தங்களின் பதினைந்தாவது திருமண நாளைக் கொண்டாடி கேக் வெட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தனது 15வது திருமண நாளை தனது மனைவி சாக்ஷியுடன் கொண்டாடியுள்ளார்
இருவரும் ஜூலை 4, 2010 அன்று டேராடூனில் நடைபெற்ற தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி கேக் வெட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
தங்கள் நாய் அவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் போது தம்பதிகள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டுவதை வீடியோவில் காணலாம். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
MS Dhoni & Sakshi celebrating their 15th wedding anniversary ❤️ pic.twitter.com/Et5JuBx0Jt
— Johns. (@CricCrazyJohns) July 4, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |