சாக போறேன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னான்! மயில்சாமி குறித்து உருகிய நண்பர் எம்.எஸ். பாஸ்கர்
மயில்சாமியின் மரணம் குறித்து எம். எஸ் பாஸ்கரன் முதல் முறையாக உருக்கத்துடன் பேசியுள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் பல குரலில் பேசும் முக்கிய கலைஞராகவும் வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்தவர்.
சினிமா மீதுள்ள அதீத நாட்டம் காரணம் பல தரப்புகளில் வாய்ப்புகள் தேடி 1984ஆம் ஆண்டு வெளியாகிய “தாவணி கனவுகள் ” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிப்பையும் சமூக சேவகராக பலருக்கும் உதவிகள் செய்து வந்தார், உதவி என்று கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் செய்யும் இளகிய மனம் படைத்தவர் மயில்சாமி.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் நெஞ்சு வலிக்காரணமாக இயற்கை மரணம் எய்தியுள்ளார், திரையுலக பிரபலங்கள் பலரும் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மயில்சாமியின் இறப்பிற்கான காரணம்
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் எம். எஸ். பாஸ்கரன் அவருக்கும் மயில்சாமிக்கும் இடையில் இருக்கும் நட்பை தெளிவுப்படுத்தி கூறியிருக்கிறார்.
இவர், “ ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் சாதாரணமாக இருந்தவர்கள் தான் அதன் பின்னர் நாங்கள் இருவரும் நண்பர்களாகினோம். மயில்சாமி என்னை வாடா போடா என கூப்பிடுவார், அந்தளவு இரண்டு பேரும் நண்பர்களாகவே மாறிவிட்டோம்.
மயில்சாமி இறப்பதற்கு முன்னர் என்னிடம் மாரடைப்பு வந்ததாகவும் அதன்பின்னர் என்ன சாவு என நக்கலாக பேசினான். நானும் அவன் என்னை விட்டு பிரிந்து விடுவான் என எதிர்பார்க்கவில்லை.
மேலும் மயில்சாமி தன்னுடைய மரணத்தை கூட சிரிப்போடு தான் என்னிடம் கூறினான். அவன் தொடர்புப்பட்ட எந்த விடயத்தையும் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு மனிதன்.” எனக் கூறினார்.