ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் படிக்கட்டிலில் தொங்கிய நபர்... - பதற வைக்கும் வீடியோ வைரல்...!
ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் படிக்கட்டிலில் தொங்கி வந்த வியாபாரியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஓடும் ரயிலில் படிக்கட்டிலில் தொங்கிய வியாபாரி
அந்த வீடியோவில், மின்னல் வேகத்தில் ரயில் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிலிருந்து இறங்குவதற்கு ஒரு வியாபாரி ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருக்கிறார். ரயிலில் இருந்தவர்கள் இவர் படிக்கட்டில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சிலர் அவரிடம் அப்படி படிக்கட்டில் தொங்கவேண்டாம் என்று கூறுகின்றனர். ஆனால், அந்த வியாபாரி எதையும் கேட்கவில்லை. இதன் பிறகு ரயில் சிறிது வேகம் குறைந்தவுடன் பட்டிக்கட்டிலிருந்து குதித்துச் செல்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இவரின் இந்த ஆபத்தான பயணம் குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.