'திடீரென அசைந்த மலை' இணையத்தில் பரவும் வீடியோ வைரல்
அயர்லாந்து நாட்டில் அடுக்கு பாறை போன்று இருக்கும் மலை அசைந்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலை அசையுமா?
இன்று அரங்கேறும் சில அதிசயங்களை நாம் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம். அப்படியே இங்கும் மலை ஒன்று அசையும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
இராட்சதப் படுக்கை என்று அழைக்கப்படும் Giant's Causeway அயர்லாந்து நாட்டில் வடகிழக்கு கடற்கரையின் ஓரம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும்.
இங்கே சுமார் 40,000 கருங்கற்கள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு அடுக்குகளாகக் காணப்படுகின்றது. பண்டைய காலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் இவை உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
1986 ல் யுனேஸ்கோ இப்பகுதியினை உலக பாரம்பரிய தளமாக அறிவித்த நிலையில், 1987ம் ஆண்டு அயர்லாந்து சுற்றுச்சூழல் துறை இயற்கை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது.
ரேடியோ டைம்ஸ் வாசகர்களின் 2005 வாக்கெடுப்பில், இந்த அமைப்பு ஐக்கிய இராச்சியத்தின் நான்காவது மிகப்பெரிய இயற்கை அதிசயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஸ்காட்லாந்தில் பென்னன்டோனர் மற்றும் அயர்லாந்தில் உள்ள ஃபின் மெக்கூல் ஆகிய இரண்டு ராட்சதர்களுக்கு இடையிலான போட்டியின் விளைவாக இந்த தரைப்பாதை உருவானதாக புராணங்கள் கூறப்படுகின்றது.
இவ்வாறு பல தகவல்களை உள்ளடக்கிய இந்த மலைப்பகுதியில் ஒரு கருங்கல் மட்டும் நகர்ந்த காணொளி வைரலாகி வருகின்றது. இக்காட்சி மிகவும் பழைய காணொளியாக இருந்தாலும், தற்போது மலை நகரும் அதிசயம் என்ற தலைப்பில் இணையத்தில் மீண்டும் உலா வருகின்றது.