இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ வாய் புற்றுநோய் அபாயம் உறுதி
தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் உருவெடுத்துவரும் பிரச்சினைங்களுள் புற்றுநோய் மிக முக்கிய இடம் வகிக்கிறது.
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கேன்சர்.
சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது. இது உடலில் இருக்கும் இடத்தை பொறுத்து என்ன புற்றுநோய் என பெயரிடப்படுகின்றது.
மேலும் புற்றுநோய் எந்த வயதினரையும் எந்த நாட்டவரையும் தாக்கும் வாய்ப்பு உள்ளது, சுருக்கமாக கூறினால் கலன்களின் வளர்ச்சி இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.
வாய்புற்றுநோய் என்பது நாக்கு, தாடை, தொண்டைப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.
காரணம், ஆண்களிடையே உள்ள புகைப்பழக்கம் மற்றும் புகையிலை பயன்பாடு போன்றவற்றினால் ஏற்படுகிறது.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்றால், வாயில் புகையிலையை அடக்குவதால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
வாய் புற்றுநோயின் அறிகுறிகள்
புகைபடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக காது மூக்கு தொண்டை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியமு அவசியம்.
அதுவே, தாடை, நாக்கு பகுதிகளில் புற்று ஏற்பட்டிருந்தால், வாயில் புண் வரலாம். இந்த புண் ஏற்பட்டு இரண்டு வாரத்திற்கு மேல் ஆறாமல் இருந்தால் அல்லது ஒருமாதம் வரை தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பற்கள், ஈறுகளில் காணப்படும் நாள்பட்ட வீக்கம் கழுத்துப்பகுதியில் நெறிகட்டிகள் போன்று தோன்றுவது இவையெல்லாம் வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகளாதும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது.