கழிவறையில் இருந்து தலையை நீட்டி எட்டி பார்த்த மலைப்பாம்பு ! ஷாக்கில் உறைய வைக்கும் காட்சி
தாய்லாந்து நாட்டின் சாமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்த 45 வயதான சோமச்சாய், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது கழிப்பறையில் அமர்ந்திருந்தபோது, அவரது அடிப்பகுதியில் ஏதோ ஒன்று மேல் நோக்கி மோதியதாக உணர்ந்துள்ளார். உடனே மேலே எழுந்து பார்த்த போது கழிப்பறை கிண்ணத்திலிருந்து ஒரு பாம்பின் தலையை பார்த்துள்ளார்.
உடனே அவர் அதனை விரட்ட அதன் மீது கழிவறைக்குள் சோப்பு நுரையை ஊற்றமுயன்றுள்ளார், ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்காததால் உடனே அவசர சேவைக்கு அழைத்துள்ளார். சுமார் 8 அடி நீளம் பாம்பு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாம்பினை பிடிக்க முயன்ற போது அது, கழிவறைக்குள் சென்று விட்டதாகவும், உடனே பாம்பை பிடிக்க வருமாறும் அவரச அழைப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெய்லி மெயில் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ள அவர், நான் கழிவறைக்குள் சென்ற போது ஒரு மலைப்பாம்பை பார்த்தேன். என் அடிப்பகுதியில், ஏதோ தள்ளப்படுவதை உணர்ந்தேன். அப்போதுதான் நான் கீழே பார்த்தேன், ஒரு பெரிய மலை பாம்பு இருந்தது. அதன் தலையை கழிவறை கிண்ணத்தின் விளிம்பில் இருந்தது.
உடனே அதிர்ச்சி அடைந்தேன். அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்ததை விவரித்தேன் என கூறியுள்ளார். பின்னர் வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை பத்திரமாக மீட்டுள்ளனர். அதன் உடல்நிலையை பரிசோதித்த அதிகாரிகள் அதனை காட்டுக்குள் விடுவதாக கூறியுள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள வனத்துறை அதிகாரிகள், இந்த பகுதி 'மலைப்பாம்புகள் ஆக்கிரமிப்புடன் இருப்பதால் வந்திருக்கலாம். இவ்வகை பாம்புகள் மக்களை கடிக்கும். நாங்கள் பாம்பினை பிடிக்க நேரும் போது அதனை பாதுகாப்பாக பிடிக்க வேண்டி இருந்தது.
பாம்பு கழிவறையில் இருப்பதை வீட்டின் உரிமையாளர் விரும்பவில்லை. அதனால் மிகவும் கவனமுடன் காத்திருந்து பாம்பு வெளியில் வரும்போது பிடித்தோம் என கூறியுள்ளார்.