மௌனராகம் படத்தில் மணிரத்னத்திற்கு பிடிக்காத காட்சி எது தெரியுமா?... பலவருடம் கடந்து வெளியான உண்மை
மணிரத்னம் இயக்கத்தில் 1986ம் ஆண்டில் வெளியான மௌனராகம் படத்தினைக் குறித்து தற்போது சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
தனது தனித்திறமையினால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டவர் தான் இயக்குனர் மணிரத்னம்.
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான இவர், 1986ம் அண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த மௌனராகம் படத்தின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.
தற்போது ரசிகர்கள் மனதில் இப்படம் நீங்கா இடம்பெற்றுள்ள நிலையில், இப்படத்தினை குறித்து சில தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.
குறித்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் துருதுருவென நடிப்பு இன்று ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் அன்று இந்த காட்சியினை வைப்பதற்கு மணிரத்னம் யோசித்தாராம்.
ஆம் முதலில் ரேவதி கதாபாத்திரத்திற்கு ஜோடி இல்லாமல் கதை எழுதப்பட்ட நிலையில், திருமணத்திற்கு முன்பே காதலித்தது போல் கூறுவதை விட அதனை காட்சியாக வைத்தால் என்ன என்று யோசித்தாராம்.
ஆனாலும் இது தேவையில்லாமல் நேரத்தினை இழுக்கும் என்று நினைத்து அரை மனதுடனே கார்த்தியின் கதாபாத்திரத்தினை மணிரத்னம் எழுதினாராம்.
தற்போது வரை குறித்த படத்தில் பேசப்பட்டு வரும் காட்சி என்னவென்றால், கார்த்தி துருதுரு என்று நடித்த அந்த காட்சிதான்.
இதுவரை தமிழ் சினிமாவில் இதே போல் பல நடிகர்கள் நடித்திருந்தாலும் கார்த்தியின் நடிப்பு தான் இந்த கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தியிருந்ததது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
