200 மெகாபிக்சல் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் - மோட்டோ நிறுவனத்தின் சிறப்பு அம்சம்!
200 எம்பி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை மோட்டோ நிறுவன வெளியீட உள்ளது. அந்த ஸ்மார்ட் போன் Moto X30 Pro தான். இந்த ஸ்மார்ட்போன் GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
200 எம்பி கேமரா மட்டுமில்லை ஒவ்வொன்றும் மேம்பட்ட அம்சங்கள் தான். என்ன ஸ்பெஷல் Moto X30 Pro ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் Moto X30 Pro 200 எம்பி பிரதான கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், மோட்டோ நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக இருக்கிறது.

இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் 200 எம்பி கேமரா மட்டும் ஸ்பெஷல் அல்ல, ஒவ்வொன்றும் ஸ்பெஷல் தான் Moto X30 Pro ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
இது சமீபத்திய ப்ரீமியம் சிப்செட் ஆகும். அடுத்து, Moto X30 Pro ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் 125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவாகும். Moto X30 Pro ஆனது சமீபத்தில் Geekbench இல் XT2241-1 என்ற எண்ணுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன் ஒவ்வொரு அம்சங்களும் மேம்பட்ட வகையில் இருக்கிறது. Moto X30 Pro ஸ்மார்ட்போனானது 200 எம்பி பிரதான கேமராவைக் கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

200 எம்பி கேமரா உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போன்களில் 64 எம்பி, 108 எம்பி, 200 எம்பி என கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் இது எதுவும் ஐபோன் கேமராவுக்கு இணையாக இருப்பதில்லை.
இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 144Hz ரெஃப்ரெஷிங் ரேட் மற்றும் HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.
