பாலூட்டும் தாய்மார்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொருட்கள்
ஒரு பெண்ணின் வாழ்வானது தாய்மையடைவதில்தான் முழுமையடைகிறது. கர்ப்பகாலத்தில் உண்ணும் உணவுகள்தான் குழந்தையைப் பிரசவிக்கும்போதும் அதற்குப் பின்னரும் தாய்க்கு பலம் கொடுக்கிறது.
குழந்தைக்கு பலத்தை அளிப்பது தாய்ப்பால் தான். சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது மிகவும் குறைவாக இருக்கும். அது குழந்தையை பெரிதும் பாதிக்கும்.
அவ்வாறு தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள் இஞ்சியை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் முருங்கைக் கீரையும் தாய்ப்பால் சுரப்பதில் அதிக பங்கு அளிக்கின்றது.
முடியுமானவரை இனிப்புகள் உண்பதை தவிர்ப்பது நல்லது.
பால் அருந்துதல், பாதாம் சாப்பிடுதல், மீன் வகைகளை உண்ணுதல் போன்றன தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.
ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறையும் ஏதேனும் உணவை உட்கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள் என்பவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.
கால்சியம், இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். புரதம்,கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் தாய்ப்பாலை நன்றாக சுரக்கச் செய்யும்.
முட்டை, பேரீச்சம்பழம் என்பவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.