அன்னையர் தினம் கொண்டாட்டம்.. உங்கள் ஜாதகத்தை வைத்தே தாயின் உடல்நிலையை கணிக்கமுடியுமாம்!
அன்னையர் தினமான இன்று மே 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில் பலரும் தாய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அன்னையர் தினத்தை நமக்கு வசதியான ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடி மகிழ்ந்தாலும் ஜோதிடத்தில் தாயை குறிக்கும் கிரகம் இன்றைய நாயகர் சந்திர பகவானே ஆகும்.
இவை, நாலாம் வீடு தாய்ஸ்தானம் என போற்றப்படுகிறது. காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகமும் அதன் அதிபதியான சந்திரனும் தாயைபற்றி கூறும் கிரக அமைப்பாகும்.
ஜோதிடத்தின் படி கால புருஷ நான்காம் பாவமான கடகமும் ஜென்ன ஜாதக பருவமும் தாயை மற்றும் மட்டுமல்லாமல் வீடு வாகன யோகத்தினையும் தெரிவிக்கிறது.
ஒருவருக்கு சொந்த வீடு இருக்குமா? இல்லையா ? என்பதை வைத்து கூறி விடலாம். வீடுமட்டுமல்ல; ஸ்திர சொத்துக்களான நில, புலன்கள் ஒருவருக்குக் கிட்டுமா? அல்லது கிட்டாதா? என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறி விடலாம்.
தீராத பணக் கஷ்டம் தீர வேண்டுமா? இந்த 1 பொருளை சாதத்தோடு சேர்த்து வைய்யுங்கள்
சொந்த வீடு
அடுத்து, செவ்வாய் 4ம் வீட்டில் இருந்தாலோ அல்லது 4 ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது 4ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஒருவருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்க யோகம் உண்டு என்று கூறலாம்.
சூரியனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் மிகச்சிறந்து விளங்கும். சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4ஆம் வீடு தாயாரையும் குறிக்கிறது.
சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவா்தான். மேலும், 4ஆம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம்.
தோஷம் நீங்க
தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில்ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும். பெண்கள் ஜாதகத்தில் சந்திரனும் ஜனன ஜாதக நான்காம் அதிபதியும் கேதுவோடு எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும்.
அம்மாவின் மனம் குளிரும் வகையில் செயல்களை செய்ய வேண்டும். அம்மாவின் மனதை வேதனையடையச் செய்தால் மாத்ரு தோஷம் உண்டாகும்.
எனவே, பெற்ற தாய் உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக இருக்க செய்வது. இறந்தபின் பித்ரு கடன்களை சரிவர செய்வது அவசியம்.