தீராத பணக் கஷ்டம் தீர வேண்டுமா? இந்த 1 பொருளை சாதத்தோடு சேர்த்து வைய்யுங்கள்
பலருக்கும் தீராத கடன் சுமை பணக்கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். என்னதான் உழைத்தாலும் மகாலட்சுமியை வீட்டில் தங்க வைக்கவே முடியவில்லை என புலம்புவார்கள்.
அப்படி உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும் வீட்டில் இனி செல்வம் அதிகரிக்குமாம்....
இந்த பரிகாரத்தை செய்ய காசு பணம் தேவையில்லை.. சாதம் இருந்தால் போதும் பெருமாளுக்கு நிவேதனமாக வைத்து தினந்தோறும் வழிப்பட்டால் போதுமானது.
அது என்ன சாதம் என்றால் பெருமாளுக்கு உகந்த துளசி சாதம் தான். இதற்க்கு, வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு சமைக்க வேண்டும்.
எச்சில் செய்வதற்கு முன்பு சமைத்த வெள்ளை சாதத்தில் இருந்து சிறிதளவு வெள்ளை சாதம் மட்டும் தனியாக ஒரு தட்டில் போட்டு, அந்த சாதம் லேசாக சூடு ஆறிய பின்பு அதில் சுத்தமான பசு நெய் விட்டு, 2 அல்லது 3 துளசி இலைகளை அந்த சாதத்தின் மேலே தூவி அதை அப்படியே பெருமாளுக்கு நிவேதனமாக வைத்து விடுங்கள்.
சிவராத்திரியில் இரவு முழுவதும் கண் விழிப்பது ஏன்? வியக்க வைக்கும் தகவல்!
பின்னர், ஒரு சிறிய மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றிவிட்டு, பெருமாளை மனதார பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும். இறுதியாக கற்பூர ஆராதனை காட்டி பெருமாளை வணங்க வேண்டும்.
இந்த நைவேத்தியத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட்டு விடலாம். தினந்தோறும், இந்த துளசி சாதத்தை பிரசாதமாக வைத்து வேண்டி வழிபடுபவர்கள் வீட்டில் பணக்கஷ்டம் என்பதே இருக்காது.
வீட்டில் பெருமாள் படம் வைத்திருப்பவர்கள் கூட வைத்து வணங்கலாம். பெருமாளும் லட்சுமியும் ஆடை ஆபரண அலங்காரத்தோடு ஜொலிக்கும் திருவுருவப் படத்தை வீட்டில் வாங்கி வைப்பது மேலும் சிறப்பைத் தரும்.