தாய்ப்பால் விற்று சம்பாதிக்கும் பெண்
அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த 33 வயதான எமிலி எங்கர் தன் தாய்ப்பாலை அதீத விலைக்கு விற்று வருகிறார்.
தாய்ப்பால் விற்கும் அமெரிக்க பெண்
அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த 33 வயதான எமிலி எங்கர், தாய்ப்பால் உற்பத்தியில் அதீதமாக திறமை கொண்டவர்.
ஐந்து குழந்தைகளுக்கு தாயான அவர், தன்னுடைய சொந்த குழந்தைகளுக்கு தேவையைக்கடந்த பாலை தினமும் 80–100 அவுன்ஸ் வரை பம்ப் செய்து சேமித்து, மற்ற குழந்தைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
தாய்ப்பாலுக்கான அதிகப்படியான தேவை மற்றும் விழிப்புணர்வு காரணமாக, அவர் மாதந்தோறும் சுமார் $1,000 (ரூ. 86,959) வருமானம் சம்பாதிக்கிறார்.
தாய்ப்பால் பைகள் உள்ளடங்கிய அவரது ஃப்ரீசர், விற்பனைக்காக தயார் நிலையில் இருப்பது வழக்கமாகி விட்டது.
சமீப காலங்களில், அமெரிக்காவில் "தாய்ப்பால் சிறந்தது" என்ற கருத்து வலுப்பெற, குழந்தை பால் மருந்துகளுக்கு மாற்றாக தாய்ப்பாலை பயன்படுத்தும் பரவலான போக்கு உருவாகியுள்ளது.
இதில், சமூக ஊடகங்கள், செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் "Make America Healthy Again" இயக்கம் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
இருப்பினும், அனைத்து தாய்மார்களும் போதுமான பால் உற்பத்தி செய்ய முடியாத நிலையில், எமிலி எங்கர் போன்றவர்கள் தேவைக்கேற்ப மாற்று வழிகளை வழங்கும் வளமான ஆதாரமாக பார்க்கப்படுகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
