4 வயது மகன் செய்த செயலால் துடிதுடிக்க கொன்ற தாய்- பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஆன்லைன் வகுப்பில் பாடம் கவனிக்காத 4 வயது மகனை கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள குடியிருப்பில், வசிப்பவர் சாகர் பாட்டக். இவரது மனைவி, சிக்கா(23). இவர்களுக்கு நான்கு வயதில் ரிதான் என்ற மகன் உள்ளார்.
ரிதான் தொடக்கப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தநிலையில், சிறுவனுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுள்ளது. ஆனால், ஆன்லைன் வகுப்பில் அமர்ந்து படிக்காமல் ரிதான் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளான்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தாய், அருகில் இருந்த தலையணையை எடுத்து சிறுவனின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார். இதனால், சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தப்படி உயிரிழந்துள்ளான்.
இதனைக்கண்டு, பதறிப்போன தாய், மகனை கொலைசெய்த குற்ற உணர்ச்சியில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.