திடீரென உயிரிழந்த தாய்! காரியம் முடித்த கையோடு மணமேடையில் மகள்- கலங்கவைக்கும் புகைப்படம்
மின்சாரம் தாக்கிய தாய் உயிரிழந்த நிலையில், காரியம் முடிந்த உடனே மகளுக்கு திருமணம் செய்துள்ள கண்கலங்க வைத்துள்ளது.
மின்சாரம் உயிரிழந்த தாய்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வரும் சண்முகவேல் மற்றும் சாந்தி தம்பதிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் மணப்பெண்ணின் தாயார் சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனால் மொத்த திருமண வீடும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், சாந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பின்பு இறுதி காரியம் முடிந்துள்ளது.
பின்பு மகளின் திருமணத்தினை எந்த தடங்களும் இல்லாமல் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தாய் இறந்த துக்கம் தாங்காமல் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், உறவினர்கள் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.