18 வயதில் இறந்து போன அம்மா... அம்மாவிற்காக 43 ஆண்டுகளாக நெப்போலியன் செய்யும் தியாகம்
நடிகர் நெப்போலியன் இறந்து போன தாய்க்கு பிடித்த காபியை 43 ஆண்டுகள் அருந்தால் தவிர்த்து வருவதை பேட்டி ஒன்றில் கூறியள்ளார்.
நடிகர் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் குறித்த தகவல்கள், காணொளிகள் தற்போது இணையத்தை அதிகமாக ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகர் நெப்போலியன் என்று நினைத்ததும் முதலில் ஞாபகம் வருவது, எஜமான் படம் தான்... அதில் மிகவும் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தினார்.
மேலும் இவரது உயரம், கம்பீரமான முறுக்கு மீசை இன்றும் ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் தோரணையாகவே இருக்கின்றது.
இந்தியாவில் சினிமா, அரசியல் என்று வலம் வந்த இவர், தனது மகன் தனுஷிற்காக அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார்.
தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மகன் தனுஷிற்கு எந்தவொரு அப்பாக்களும் செய்யாத பல விடயங்களை செய்து வருகின்றார். சமீபத்தில் இவருக்கு ஜப்பான் டோக்கியோவில் திருமணத்தையும் கோலாகலமாக செய்து முடித்தார்.
இப்படியொரு சோகமா?
நடிகர் நெப்போலியனின் வளர்ச்சியினை அவரது தந்தை அவருடன் இருந் பார்த்துள்ளார். ஆனால் அவரது தாய் பார்த்ததே இல்லை.
ஏனெனில் அவரது அம்மா நெப்போலியன் 18 வயதாக இருக்கும் போதே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
அம்மா மீது அளவுகடந்த பாசம் கொண்ட நெப்போலியன், அம்மாவை இழந்த வயதில் அவருக்காக எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதால், 43 ஆண்டுகளாக காபி அருந்துவதையே விட்டுள்ளார்.
ஏனெனில் அவரது தாய்க்கு காபி என்றால் ரொம்ப பிடிக்குமாம். அதனால் அம்மாவிறகு பிடித்த ஒன்றை நாம் விட்டுவிடுவோம் என்று இந்த முடிவை எடுத்து தற்போது வரை காபி குடிக்காமல் இருந்து வருகின்றார்.
அந்த அம்மா தற்போது இருந்திருந்தால், தான் இன்று சம்பாதித்த பெயர், புகழ், பணம் என்ற வளர்ச்சியை பார்ப்பதற்கு இல்லை என்ற ஏக்கம் தற்போதும் இருப்பதாக நெப்போலியன் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |