Viral Video: பசியால் வாடிய பறவைகுஞ்சு தாயை எதிர்பார்த்த தருணம்... 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி
Common Tern என்ற பறவை ஒன்று தனது குஞ்சு பறவைக்கு மீனை உணவாக கொடுக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
தாயின் பாசப்போராட்டம்
உலகில் எந்தவொரு உயிரினமாக இருந்தாலும் தாய்பாசம் என்பது கட்டாயம் இருக்கும். இது ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமின்றி ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளுக்கும் தான்.
அவ்வப்போது விலங்குகள் பறவைகளின் தாய்பாசத்தினை நாம் அவதானித்து வரும் நிலையில், இங்கும் அப்படியொரு நெகிழ வைக்கும் காட்சியினைத் தான் காணப்போகிறோம்.

Common Tern என்ற பறவை குஞ்சு ஒன்று பசியால் வாடி நிற்கின்றது. ஆனால் குறித்த பறவையின் தாய் எங்கிருந்தோ மீன் ஒன்றினை கொண்டு வந்து தனது பிள்ளைக்கு உணவாக கொடுத்துள்ளது.
தாய் கொடுத்த மீன் உணவினை குஞ்சுபறவை மிகவும் கவனமாக முழுவதும் சாப்பிட்டுள்ளது. இது சாப்பிடும் அழகை ஒருமுறை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கவே தோன்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |