Viral video: பாத்ரூம் கழுவும் சிறுமி.. அம்மா கேட்டதும் கூறிய பதிலை பாருங்க
வீட்டில் அம்மா கொடுத்த தொல்லை தாங்க முடியாமல் சிறுமி செய்த விடயம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாத்ரூம் கழுவும் சிறுமி
பொதுவாக பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தால் அவர்களின் நலன் கருதி அம்மாக்கள் அதிகமாகவே கட்டுபாடுகள் போடுவார்கள்.
அவர்களுக்கு காலை எழும்புவது முதல் இரவு தூங்குவது வரையிலான அனைத்து வேலைகளையும் பட்டியல்படுத்தி வைத்திருப்பார்கள். ஏனெனின் பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் சில விடயங்களை பழக்கிக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அப்படியொரு சிறுமி அம்மா போட்ட கட்டுப்பாடுகளால் அவரே வீட்டில் வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார். அந்த வகையில், சிறுமியொரு பாத்ரூம் கழுவும் ப்ரிஷை எடுத்து தேய்த்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது வந்த அம்மா என்ன வர்ஷனி செய்கிறாய்? என கேட்க அதற்கு பதில் கொடுத்த சிறுமி, “வெளியில் விளையாடக் கூடாது, பாதைக்கு செல்லக் கூடாது. ஏனென்றால் பாதையில் பஸ் வரும். தொலைபேசியும் பார்க்கக் கூடாது கண்கள் தெரியாமல் போகும், அதனால் தான் நானே வீட்டு வேலைகளை கற்றுக் கொண்டு செய்து வருகிறேன்..” என்கிறார்.
இதனால் கடுப்பான அம்மா, “ பேசாமல் நீ அத வைச்சிட்டு வாங்க..” என சிறுமியை கோபமாக அழைத்து செல்கிறார். இந்த சிறுமியின் புலம்பலை கேட்கும் பொழுது வேடிக்கையாகவே உள்ளது.
இது போன்று கட்டுபாடுகள் விதிப்பது குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே தவிர, அம்மாக்களின் தவறு அல்ல என்பதை பெரியவர்களாக வளர்ந்த பின்னரே பெண் பிள்ளைகள் புரிந்து கொள்கிறார்கள். அந்த காணொளிக்கு கீழ் நிறைய தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் அலப்பறைகளை கருத்துக்களாக பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
