உலகின் கொடிய விஷப்பாம்பு எது தெரியுமா? ராஜநாகம் இல்லையாம்
பொதுவாக மனிதர்களை பொறுத்தவரையில் பூமியில் இருக்கக் கூடிய உயிரினங்களில் மிகவும் அச்சுறுத்தக் கூடிய உயிரினங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பாம்புகள் தான்.
பாம்பு என வாயால் சொல்லும் போதே பதறியடித்து ஓடுவோரே அதிகமாக இருப்பார்கள். கை கால்கள் இல்லாவிட்டாலும் மிகப்பெரிய விலங்குகளை விட கொடிய உயிரினமாகவே பாம்புகள் கருப்படுகின்றது.
இதற்கு காரணம் அதனுடைய கொடிய விஷம். இயற்கையிலேயே பாம்புகளின் பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தன்னை ஏனைய விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் இரையை எளிமையாக வேட்டையாடுவதற்குமே ஆகும்.
பாம்புகள் பொதுவாக மனிதர்களை தீண்வதற்கு காரணம் மனிதர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. அதனை மனிதர்கள் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தினால் தான். அந்த வகையில் உலகில் மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பு எது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பலருக்கும் பாம்பு பயம் என்றாலும் உலகத்தில் எந்த பாம்பு அதிக விஷத்தை கொண்ருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதில் நிச்சயம் அதிக ஆர்வம் இருக்கும்.
உலகில் கிட்டத்தட்ட 600 வகையான பாம்பினங்களில் சுமார் 200 வகையான பாம்புகள் மனித இனத்துக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. அவற்றில் சுமார் 100 வகைகள் மட்டுமே அதிக விஷம் கொண்ட பாம்பு வகைகளாக பார்க்கப்படுகின்றது.
ஆய்வுகளின் அடிப்படையில் இவற்றில் மிக அதிக விஷம் கொண்ட பாம்பாக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட
து. கண்ணாடி விரியன் தான்.
இதனை ஆங்கிலத்தில் ரசல் வைப்பர் (Russel Viper) என அழைப்பார்கள்.
இதன் தோற்றம் பார்ப்பதற்கு மலைப்பாம்பு போன்று காணப்படுகின்ற போதிலும், உருவத்தில் அதைவிட சிறியதாகவே காணப்படும்.
கண்ணாடி விரியனின் விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி உயிரிழக்க செய்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. எனவே இந்த விஷம் மிகவும் விரைவாக செயற்படுகின்றது.
ஏனைய விஷ பாம்புகள் கடித்தால் சில மணி நேரங்கள் வரை மனிதர்களால் தாக்குப்பிடிக்க கூடியமததாக இருக்கும். ஆனால் கண்ணாடி விரியனின் விஷமானது சில நிமிடங்களிலேயே உயிரை பறிக்கும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனடிப்படையில் கண்ணாடி விரியன் மிகவும் கொடிய பாம்புகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |