டால்ஃபின்கள் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
டால்பின்கள் மிகவும் பிரபல்யாமான உயிரினமானவும், உலகளவில் அனைவராலும் விரும்பப்படும் உயிரினமாகவும் அறியப்படுகின்றது.
பெரும்பாலும் பொழுது போக்குக்கு பூங்காக்களில் முக்கிய இடம் வகிக்கும் இவை, புத்திசாலிகள் என்பதும், அவற்றின் மூளை வளர்ச்சி மனிதர்களைப் போலவே இருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
டால்பின்கள் பற்றிய பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான விடங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
டால்பின்களின் சிறப்பு குணங்கள்
டால்பின்கள் பொதுவாக மனிதர்களை போல் சமூகமாக வாழும் குணம் கொண்டவையாக இருக்கின்றது. அவற்றுக்கென ஒரு மொழி இருக்கிறது, கண்ணாடியில் தங்களை அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றலும் இவற்றுக்கு இருக்கின்றதாம்.
அவை இறந்தவர்களுக்காக மனிதர்களை போல் துக்கம் அனுஷ்டிக்கும் குணத்தையும் கொண்டுள்ளது.
மாமிச உண்ணிகளான டால்பின்கள் மீன், ஸ்க்விட், ஆக்டோபஸ், ஓட்டுமீன்கள், செபலோபாட்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் உட்பட பல்வேறு வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றது.
சிறிய டால்பின்கள் பொதுவாக மீன் மற்றும் பிற சிறிய இரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுகின்றன.
பெரிய டால்பின்கள் கடல் சிங்கங்கள், கடற்பறவைகள், சுறாக்கள் மற்றும் பெங்குவின் போன்ற பெரியளவிலான உயிரினங்களையும் உண்ணும்.
டால்பின்கள் பெரும்பாலும் தங்கள் உணவைப் பிடிக்க, இரையைத் தப்பிக்கவிடாமல் இருக்க அதைச் சுற்றி வட்டமிட ஒன்றாக வேலை செய்கின்றன.
டால்பின்களுக்குப் பற்கள் உண்டு, ஆனால் பெரும்பாலானவை அவற்றைப் பயன்படுத்தி உணவை மென்று விழுங்குவதில்லை, தலையை முதலில் பிடிப்பதால், உணவில் உள்ள செதில்கள் அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அவை தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், பொருட்களைப் பிடிக்கவும் பற்களைப் அதிகமாக உபயோகிக்கின்றது.
டால்பின்களின் கடினமான சிக்கலை தீர்க்கும் தன்மை, நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் போன்றவற்றை ஆய்வாளர்கள் இன்றளவும் ஆய்வு செய்து வருகின்றனர். மற்ற விலங்குகள் போலல்லாமல் டான்ஃபின்கள் வாழ்நாள் முழுவதும் திறன்களைக் வளர்த்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றது.
தாய் டால்பின்களால் தன் வயிற்றுக்குள் இருக்கும் பிறக்காத குட்டிகளுடனும் கூட தொடர்பு கொள்ளும் ஆற்றல் கொண்டவை. குறிப்பட்ட ஒலியை உருவாக்கி, குட்டிகள் பிறப்பதற்கு முன்பே அவற்றின் மொழியை கற்றுக்கொள்ளுகின்றன.
டால்ஃபின்களின் தூக்க முறையும் முற்றிலும் வேறுப்பட்டமாகும். அவை மற்ற உயிரினங்களால் வேட்டையாடப்படாமல் இருப்பதற்கு, நீந்திக்கொண்டே தூங்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இதனால் டால்ஃபின்கள் ஒரே இடத்தில் தூங்குவதற்காக ஒருபோதும் நேரம் ஒதுக்குவது கிடையாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
