புத்திசாலியாகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட பழக்கங்கள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே அதிக புத்திக்கூர்மை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
மற்றவர்கள் ஒருமணிநேரத்தில் புரிந்துக்கொள்ளும் விடயத்தை இவர்கள் வெறும் பத்து நிமிடத்தில் தெளிவாக விளங்கிக்கொள்ளும் ஆற்றலுடன் இருப்பார்கள். அப்படி கற்பூர புத்தி கொண்ட பெண் ராசியினர் யாரை் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே புத்திசாலித்தனம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வெறும் புத்தக அறிவுக்கு அப்பால், இவர்களிடம் சிறந்த பகுப்பாய்வுத் திறன்களுக்கும், மற்றவர்கள் தவறவிடும் விஷயங்களைப் பார்க்கும் திறமையும் இருக்கும்.
இவர்கள் பிறப்பிலேயே உலகத்து பொது விடயங்களை யாருடைய வற்புறுத்தலும் இன்றி தானாக கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவரை்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் வாழ்வில் பல்வேறு சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் காரணமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் யாதார்த்த அறிவாற்றலுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு முடிவெடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தர்கங்களுக்கு விடை தேடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நுண்ணறிவாற்றல் மற்றவர்களை விடவும பல மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த ராசி பெண்கள் சகல துறை சார்ந்தும் ஓரளவான அறிவை கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கண்டுப்பிடிப்புகள் பற்றி அறிந்துக்கொள்வதிலும், ஆற்றல் காட்டுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் பிறப்பிலேயே புத்திசாலிகளாகவும் இருப்பதால், எவ்வளவு கடினமான உணர்ச்சி போராட்டங்களில் சிக்கிக்கொண்டாலும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளிவந்துவிடுவார்கள்.
தங்களை தாங்களே மீட்டுக்கொள்ளும் ஆற்றல் இந்த ராசி பெண்களிடம் நிச்சயம் இருக்கும். மக்களைப் படிப்பதிலும், பாசாங்குகளை கண்டுப்பிடிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
