பயம்னா என்னானே தெரியாத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் இவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள், இயல்பாகவே எதற்கும் துணிந்தவர்களாக இருப்பார்களாம். உண்மையில் இவர்களை அச்சுறுத்தி பார்ப்பது பெரும் சவாலான விடயம்.
அப்படி சிங்கத்தின் ஆளுமையை பிரதிபலிக்கும் பயம் என்ற நாமமே அறியாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசியினர் துணிச்சலான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் சவாலுக்குத் தயாராக இருக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் நினைத்த காரியத்தை சாதிக்கும் வரையில் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மனதில்பட்ட வியடத்தை அப்படியே வெளிப்படுத்தும்குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையை வெளிப்படுத்துவதற்கு துளியளவும் பயம் அற்றவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சக்திகளின் மூலமாகவும் அனைத்து கிரகங்களையும் ஆளும் கிரகமாகவும், திகழும் சூரியனால் ஆளப்படுவதால், இவர்கள் இயல்பாகவே தலைமைத்துவ பண்புகளை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இலக்கை அடைவதற்கு அயறாது பாடுபடும் இந்த ராசியினர் யாருக்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள். இவர்களை பயம் காட்டுவது யாருக்கும் இயலாத காரியமாக இருக்கும்.
சிம்மம் அதன் கட்டளையிடும் இருப்பு மற்றும் ஊக்கமளிக்கும் திறனுக்காக்கு பெயர் பெற்றது. மற்றவர்களுக்கே தைரியம் சொல்லும் இவர்களை அச்சுறுத்துவது யாருக்கும் அரிது.
தனுசு
அச்சமற்ற ஆய்வு மற்றும் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக தனுசு ராசியினர் அறியப்படுகின்றார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் பயத்தை நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் எதிர்கொள்கிறார்கள், தயக்கத்தை விட அனுபவம், வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் மீது இவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் ஆபத்தை பார்தது அச்சமடைய மாட்டார்கள் இவர்களின் அந்த மனநிலை மற்றவர்கள் தவிர்க்கும் துணிச்சலான விஷயங்களைச் செய்ய உதவுகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |