உலகிலேயே கோடிகளில் விற்பனையாகும் மதுபானம் எது தெரியுமா? தெரிஞ்சா அசந்து போவீங்க
பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகள் முதல் பொருளாதாரத்தில் வீழ்ச்சியான நாடுகளாக இருந்தாலும் சரி, மதுபானப் பிரியர்கள் இல்லாத நாடுகளே பார்க்க முடியாது. பார்த்தாலும் அது அரிதாகவே இருக்கும்.
மதுபானம் சாதாரண விலையில் இருந்து கோடிகளில் வரை விற்பனை செய்யப்படுகின்றன. உலகின் மிக விலையுயர்ந்த மதுபானத்தை சுவைக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும்.
உதாரணமாக, ரூ.51 கோடி மதிப்புள்ள மதுபானமும் விற்பனை செய்யப்படுகிறது எனத் தரவுகள் கூறுகிறது. இதனை மதுபானம் இசபெல்லா ஐஸ்லேவ் (sabella's Islay) என அழைக்கிறார்கள். அதன் விலை சாதாரண மக்களுக்கு மயக்கத்தையே ஏற்படுத்தும்.
சுமாராக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 52 கோடி வரை விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் டிகாண்டர் எனப்படும் திரவத்தை பிரிக்கும் ஒரு கருவியில் 5,000 வைரங்கள், கிட்டத்தட்ட 300 ரூபிகள் மற்றும் இரண்டு வெள்ளை தங்கக் கட்டிகளால் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும் டெக்கீலா லே 295 டயமண்டே உள்ளது, அதில் இரண்டு கிலோ பிளாட்டினம் மற்றும் 4,100 வெள்ளை வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இது போன்று சிறப்புகளுடன் அதிக விலைக்கு விற்பனையாகும் மதுபானங்கள் பற்றி பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
1. Isabella's Islay
Isabella's Islay என அழைக்கப்படும் மதுபானமானது டிகாண்டர் ரத்தினங்களால் பதிக்கப்பட்டுள்ளது. இதில் 5,000 க்கும் மேற்பட்ட வைரங்கள், கிட்டத்தட்ட 300 ரூபிகள் மற்றும் சுமார் இரண்டு வெள்ளை தங்கக் கட்டிகள் உள்ளன. இந்த மதுபானத்தை உலகின் மிக விலையுயர்ந்த விஸ்கியாக பார்க்கிறார்கள். இதன் மதிப்பு $6.2 மில்லியன் (தோராயமாக ரூ. 51 கோடி).
2. Billionaire Vodka
உலகிலுள்ள பெறுமதியான மதுபானங்களில் ஒன்றான Billionaire Vodka ரூ.27.5 கோடி விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 3,000 வைரங்களால் பதிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஆல்கஹால்களில் ஒன்றாக இருக்கிறது. லேசான மலர் நிறத்தைக் கொண்டுள்ளது. அதே போன்று இது ஒரு தனித்துவமான வடிகட்டுதல் செயல்முறையையும் கொண்டுள்ளது.
3. Arctic Ale by Allsopp
மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உயர் ரக மதுபானங்களில் ஒன்றாக Arctic Ale by Allsopp பார்க்கப்படுகிறது. இதில் பிரத்யேக பிராண்டுகள் ஏலத்தில் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. இது 140 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக இருக்கும் இந்த மதுபானம் உலகின் மிக விலையுயர்ந்த பானமாக பார்க்கப்படுகிறது. இந்த பீர் முதலில் சர் ஜார்ஜ் நரேஸின் 1875 ஆர்க்டிக் பயணத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது என வரலாற்று சான்றுகள் உள்ளன. அதன் விலையானது கடந்த 2007 ஆம் ஆண்டில் ($503,300) ரூ. 4.1 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |