பூம்புகார் முதல் தனுஷ்கோடி வரை.. தவற விடக்கூடாத தமிழக கடற்கரைகள்
மாதம் முழுவதும் வேலைப் பார்த்து சலிப்பாக உள்ளவர்கள் நிம்மதியாக இருக்க கடற்கரைக்கு செல்ல வேண்டும் என ஆசைக் கொள்வார்கள்.
'அப்படி நினைக்கும் பொழுது நாம் ஏற்கனவே பார்த்த இடங்களுக்கு போகாமல் புதிய புதிய இடங்களை தெரிந்து வைத்திருந்தால் அங்கு சென்று நம்முடைய தனிமையை போக்கிக் கொள்ளலாம்.
அப்படி இளைஞர்கள் பலரும் சுற்றுலா செல்லும் பொழுது அதிகமாக சென்று பார்க்கும் இடம் தான் கோவா, மாலத்தீவுகள் கடற்கரைகள். தமிழ்நாட்டில் இருக்கும் கடற்கரைகள் அதற்கு சற்றும் குறைந்தவை அல்ல.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அழகு கொஞ்சும் அழகிய கடற்கரைகளை பற்றி விரிவாக பதிவில் பார்க்கலாம்.
1. பூம்புகார் கடற்கரை (காவேரிபூம்பட்டினம்)
பூம்புகார் கடற்கரை இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இடங்களில் ஒன்று. இந்த கடற்கரை மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்காள விரிகுடாவில் உள்ள பூம்புகார் நகரில் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரம் முந்தை காலத்தில் வரலாற்றில் சிறப்பாக பேசப்பட்ட இடங்களில் ஒன்றாக இருந்தது. அந்த காலப்பகுதியில் இந்த நகரத்தை காவேரிபூம் பட்டினம் என அழைத்தார்கள். இங்கு ஏப்ரல்-மே பருவத்தில் "சித்ர பௌர்ணமி" சிறப்பாக கொண்டாடப்படும். சிலப்பதிகார கலைக்கூடமும் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.
2. கோவளம் கடற்கரை
கோவிலாங் கடற்கரை (Covelong Beach) அல்லது கோவளம் கடற்கரை சென்னையில் உள்ள வங்காள விரிகுடாவின் கடற்கரையில் உள்ள கோவளம் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது. கோவளம் கடற்கரை சாகசப் பிரியர்களுக்கு சொர்க்கமாக பார்க்கப்படுகிறது. இங்கு சர்ஃபிங், விண்ட்சர்ஃபிங் மற்றும் ஜெட் ஸ்கீயிங் போன்ற பல்வேறு நீர் விளையாட்டுகள் பிரபலமாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் சென்றால் இவற்றை அனுபவிக்கலாம். அலைகளில் சர்ஃபிங் செய்யும் சிலிர்ப்பூட்டும் விளையாட்டைக் கொண்டாட ஆண்டுதோறும் சர்ஃப் டர்ஃப் நடந்து கொண்டிருக்கிறது.
3. தனுஷ்கோடி கடற்கரை
தமிழ்நாட்டின் தெற்கு முனையில் அமைந்துள்ள தனுஷ்கோடி கடற்கரை, ஒரு பக்கம் மன்னார் வளைகுடாவாலும் மறுபுறம் வங்காள விரிகுடாவாலும் சூழப்பட்டு அமைந்திருக்கும். இந்த வங்காள விரிகுடாவும் இந்தியப் பெருங்கடலும் சந்திக்கும் இந்த கடற்கரையில் இருந்து 'அரிச்சல் முனை' புள்ளியைக் காணலாம். ராமாயண இதிகாசத்தில் வரும் ராமர், தனது வில்லின் நுனியை சுட்டிக்காட்டி, 'ராம சேது' எனப்படும் கடலின் குறுக்கே ஒரு பாலம் கட்டும்படி தனது படையிடம் கேட்டதாக நம்பிக்கை ஒன்று உள்ளது. இந்த கடற்கரை புராண கதைகளில் இடம்பெற்றுள்ளது. கடற்பறவைகள் மற்றும் ஃபிளமிங்கோக்கள் போன்ற புலம்பெயர்ந்த பறவைகளை இங்கு பார்க்கலாம்.
4. தரங்கம்பாடி கடற்கரை
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை டிரான்குபார் கடற்கரை என அழைக்கப்படுகிறது. தங்க நிற மணல் மற்றும் மென்மையான அலைகள் காரணமாக கடற்கரைகளுக்கு அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். சூரிய அஸ்தமன புகைப்படங்களுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையும் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. கடந்த 17 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதிலுமிருந்து வணிகர்களை ஈர்க்கும் ஒரு துறைமுக நகரமாக இது அமைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
