காலையில் எழுந்ததும் எந்தெந்த பொருட்களை பார்த்தால் அதிர்ஷ்டம்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
காலையில் எழுந்த உடன் நாம் பார்க்கும் பொருட்களை வைத்தே அன்றைய தினம் அமையும் என்ற கருத்து இந்துக்களிடையே அதிகமாக இருக்கின்றது.

ஏனெனில் குறித்த பொருளின் பிரதிபலிப்பு நாள் முழுவதும் நேர்மறை ஆற்றலை அளிப்பதுடன், செய்யும் வேலைகள் அனைத்திலும் வெற்றியும் ஏற்படும்.
அந்த வகையில் காலையில் எழுந்ததும் நாம் பார்க்க வேண்டிய சில பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலையில் எழுந்ததும் இதை பாருங்க
நமது உள்ளங்கையில் மகாலட்சுமி குடியிருப்பதாகவும், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் வாசம் செய்வதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே காலையில் மகாலட்சுமியை நினைத்துக் கொண்டு நமது உள்ளங்கையை பார்த்தால் அன்றைய தினம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
அதே போன்று நமது வீட்டில் இருக்கும் சுவாமி படங்களை எழுந்ததும் பார்த்துவிட்டு அன்றைய வேலையினை துவங்கினால் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி நாள் முழுவதும் நிறைந்திருக்கும்.

பூரண கும்ப கலசத்தினை காலையில் எழுந்து பார்த்தால் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகவும், மனநிறைவாகவும் இருக்கும்.
மங்களகரமான பொருளான பார்க்கப்படும் மஞ்சள் மற்றும் குங்குமத்தை காலையில் எழுந்ததும் பார்த்துவிட்டு சென்றால் அன்றைய காரியங்கள் அனைத்தும் மங்களகரமானதாக இருக்கும்.
காலையில் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு அன்றைய நாளை தொடங்கினால் எதிரிகளின் சூழ்ச்சிகளால் பாதிக்கப்படாமல் இருப்பதுடன், கண் திருஷ்டியும் நீங்கும்.

காலையில் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தினை பார்ப்பது மிகவும் நல்லதாகும். பல நாட்கள் தீராத பிரச்சனையும் முடிவிற்கு வரும்.
மேலும் காலையில் எழுந்து திருநீறை பார்ப்பதும் நன்மையை அளிக்கும். மன தைரியமும் அதிகரிப்பதுடன், குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
யானையின் புகைப்படத்தினை அவதானித்தால் தடைகள் அனைத்தும் நீங்கி நாள் முழுவதும் நல்ல பலன் கிடைக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |