காலையில் எழுந்ததும் சோர்வாகவே இருக்கிறீர்களா? இந்த தவறை செய்யாதீங்க
காலையில் தூங்கி எழும் போது சிலர் எப்பொழுதும் சோர்வாகவே இருப்பார்கள். இந்த சோர்வானது 15 முதல் ஒரு மணி நேரம் நீடிக்க வாய்ப்புள்ளதுடன், இதனால் அன்றாட வேலையும் பாதிக்கப்படுகின்றது.
இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
சோர்வு ஏற்பட முக்கிய காரணம்
இரவில் செல்போன், லேப்டாப்பினை பயன்படுத்தும் போதும் மெலடோனின் எனும் ஹார்மோனை பாதித்து உங்களது தூக்கத்தினை பாதிப்பதால், காலையில் அதிக சோர்வு காணப்படும்.
இரவில் காபி, சாக்லேட் போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும். காபினில் உள்ள மூலக்கூறு மூளையை விழிப்போது வைத்திருப்பதால், தூங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் காலையில் சோர்வாக நாம் காணப்படுவோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று பெரும்பாலான நபர்கள் உடல் அலுப்பினை போக்கவும் நிம்மதியாக தூங்கவும் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவை பெரிய தவறு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆம் நாம் எடுத்துக்கொள்ளும் மதுவின் அளவுக்கு ஏற்ப நமது தூங்கமும் குறைந்துவிடுமாம்.
தூங்கும் முன்பு பானங்கள் எதையும் அதிகமாக குடிக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும் இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு சோர்வு ஏற்படும்.
அதே போன்று தூங்கும் இடம் மிகவும் முக்கியமாகும். தூங்கும் இடம் சுத்தமாகவும், சரியான படுக்கையையும் தெரிவு செய்ய வேண்டும். மேலும் சத்தம் அதிகமாக இல்லாத இடத்தினை தெரிவு செய்து தூங்கினால் தூக்கம் தடைபடாது.
மேலும் மிக சூடான மற்றும் குளிரான இடத்தில் தூங்காமல், மிதமான வெப்பநிலை இருக்கும் இடத்தினை தெரிவு செய்து தூங்கினால் தூக்கத்தில் தடை ஏற்படாமல் இருப்பதுடன், நல்ல ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.
இன்சோம்னியா , தூக்கத்தில் நாடாகும் வியாதி, தூங்கும்போது இடை இடையில் நமக்கே தெரியாமல் சுவாசம் தடைபடுவது போன்ற டிஸார்டர்கள் கூட நீங்கள் காலையில் எழுந்துக் கொள்ளும்போது ஏற்படும் சோர்வுக்கு காரணமாக இருக்கலாம்.