நாள் முழுவதும் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டுமா? காலை உணவாக இதை எடுத்துக்கோங்க
காலை உணவாக கோதுமை ரவையால் ஆன உணவினை சாப்பிட்டால் நாள் முழுவதும், எனர்ஜியுடனும், சோர்வு இல்லாமலும் காணப்படலாம்.
அந்த வகையில் இன்று கோதுமை ரவையினால் ஆன புட்டு சுலபமாக எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கோதுமை ரவை புட்டு
ஒரு கடாயைச் சூடாக்கி ஒரு கப் கோதுமை ரவையை வறுக்கவும். அது ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து குருணையான தூளாக அரைக்கவும்.
இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதில் அரை டீஸ்பூன் உப்பு மற்றும் அரை டீஸ்பூன் ஏலாக்காத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீரை தெளித்துப் பிசையவும். துருவிய கால் கப் தேங்காயில் கால் கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனை புட்டு குழாயில் சேர்த்து, பின்னர் ரவை கலவையை நிரப்பி மூடியை மூடி, 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
ஆரோக்கியமான மற்றும் சுவையான கோதுமை ரவா புட்டு தயார். இதனை வாழைப்பழம் மற்றும் தேங்காய்ப்பாலுடன் பரிமாறலாம்.