பால் குடிக்காமலே பாலின் சத்துக்கள் வேண்டுமா? அப்போ இந்த கீரை போதும்
கீரை என்றாலே பொதுவாக சத்துக்கள் நிறைந்து தான் காணப்படுகின்றன. ஆனால் நிறைவான உணவிற்கு சமனான பாலில் இருக்கும் அதே சத்துக்கள் முருங்கை கீரையிலும் உள்ளது.
முருங்கை கீரை
பாலை விட முருங்கை கீரையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக கால்சியம் சத்துள்ளது. ஆகையால் தினமும் பால் அருந்த முடியாதவர்கள் இந்த கீரையை சாப்பிடலாம்.
முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ அதிகமாக உள்ளது. அதேப்போல் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது.
பாலை விட இதில் அதஜக சத்துக்கள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதம் குறைவாக கிடைக்கின்றது. லாக்டோஸ் சகிப்பின்மை உடையவர்கள் அல்லது வீகன் டயட் பின்பற்றுபவர்களுக்கு முருங்கை கீரை பயனுள்ளதாக இருக்கும்.
தாவர உணவுகளை மட்டுமே சார்ந்திருக்கும் பலருக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பது சவாலாக இருக்கும் நிலையில் இது நிச்சியம் அருமருந்தாக இருக்கும்.
முருங்கை கீரையில் வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி சத்துகள் இல்லை பாலை தவிர்த்து இந்த கீரையை எடுத்துக்கொள்பவர்களுகள் இதனுடன் வேறு சத்துக்கொண்ட உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
பாலை எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள் இந்த கீரையை உணவில் எடுத்துக்கொள்ளுதல் மிகவும் முக்கியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |