இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செவ்வாழை: எப்படி சாப்பிடலாம்?
பொதுவாக நாம் அன்றாடம் சாப்பிடும் வாழைப்பழங்களில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன.
இவை பல வகைகளில் இருக்கும். நிறம், தோற்றம், மணம் என முற்றிலும் வேறுபட்ட வகைகளில் வாழைப்பழங்கள் இருக்கின்றன.
இவற்றில் முக்கியமானதாக செவ்வாழை பழம் பார்க்கப்படுகின்றது. ஏனெனின் மனிதர்களுக்கு ஏற்படும் கொடிய நோய்களை கூட விரட்டியடிக்கும் ஆற்றல் இந்த செவ்வாழைக்கு உள்ளது.
அந்த வகையில் செவ்வாழையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
செவ்வாழை சாப்பிட்டால் என்ன பயன்
1. செவ்வாழையில் அந்தோசயினின்கள் உட்பட சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை ஆன்டிஆக்ஸிடன்ட்களை அதிகரிக்கிறது. அத்துடன் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமளிக்கிறது.
2. இதயம் தொடர்பான நோயாளர்கள் செவ்வாழை சாப்பிடலாம். இதிலிருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தம், இதய செயல்பாடு ஆகியவற்றை சீராக்குகிறது.
3. செவ்வாழை பழத்தில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இது வழக்கமான குடல் இயக்கத்தை ஆதரித்து மலச்சிக்கலை முடிவுக்கு கொண்டு வருகிறது.
4. கார்போஹைட்ரேட்டுகளின் மூலமாக செவ்வாழைப்பழங்கள் இருக்கின்றன. இதனை சிற்றுண்டியாக எடுத்து கொள்ளும் பொழுது உடலில் ஆற்றல் அதிகரிக்கின்றது. சோர்வாக இருப்பவர்களுக்கு இதனை மாலை வேளைகளில் சாப்பிடக் கொடுக்கலாம்.
5. செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இவை வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் மனித உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
6. உடலில் ஏற்படும் தேவையற்ற வீக்கத்தை குறைக்கும். செவ்வாழையில் இருக்கும் சேர்மானங்களினால் அழற்சி ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |