ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தனுமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்
நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
இன்று நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நீரிழிவு நோயினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது.
நீரிழிவு நோயாளிகள் அவர்களின் உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதும் சர்க்கரையை அதிகரிக்கிறது.
முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தும் சூப்பரான உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள்
நீரிழிவு நோயாளிகள் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்தி நிறைந்த நாவல் பழத்தினை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பழ விதை தூள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் ஒரு சஞ்சீவியாக கருதப்படுகின்றது.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட தக்காளியை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமுாம்.
நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் கொட்டைகள், உலர் பழங்கள் மற்றும் விதைகள் இவற்றினை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை ஊட்டச்சத்துக்களின் ஆற்றல்மையமாக இருக்கின்றது.
மேலும் இவற்றில் கொழுப்பு, நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக இருக்கின்றது. அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், சியா விதைகள், பாதாம் மற்றும் முந்திரி ஆகியவற்றை அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
மாவுச்சத்து இல்லாத காய்கறிகளான ப்ரோக்கோலி, கீரை, முட்டைக்கோஸ், குடைமிளகாய் மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றினை எடுத்துக்கொள்ளவும்.
வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் கற்றாழையில் காணப்படுவதால், இதன் சாறை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொண்டால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
முழு கோதுமை, ஓட்ஸ், குயினோவா மற்றும் பழுப்பு அரிசி இவற்றினை எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
உணவில் பீன்ஸ், பருப்பு வகைகள் இவற்றினை சேர்க்கவும். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |