6 மாத குழந்தையின் பரிதாப நிலை... 50 இடங்களில் கடித்து குதறிய எலி
அமெரிக்காவில் 6 மாத குழந்தையை எலி கடித்து குதறியதால், பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குழந்தையை கடித்த எலி
அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் எவான்ஸ்வில் பகுதியில் வசித்து வரும் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதில் 6 மாத ஆண் குழந்தையும் அடங்கும். டெலானியா துர்மன் எனும் அவர்களின் உறவுக்கார பெண்ணும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு 6 மாத குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதைக் கண்ட தந்தை அவசர சேவைக்கு கதகவல் அளித்த நிலையில், காவல் துறையினர் விரைந்து வந்து பார்த்துள்ளனர்.
குறித்த குழந்தையின் தலை மற்றும் முகம் உட்பட 50 இடங்களில் எலி கடித்து காயம் ஏற்பட்டு ரத்த களரியாக இருந்துள்ளது. வலது கையில் அனைத்து விரல்களின் தலைபாகங்களையும் எலி சாப்பிட்டதால், உள்ளே இருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்த நிலையில், பெற்றோர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அதாவது வீடு முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டதால், எலிகள் நடமாட்டம் அதிகமானது தெரியவந்து்ளளது. மருத்துவமனை சிகிச்சை முடிந்து குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |