சட்டென்று உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? பாதாம் செய்யும் அற்புதம்
உடல் பருமன் அதிகரித்து காணப்படுபவர்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு பாதாமை உட்கொண்டால் நல்ல மாற்றத்தை காணலாம்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாக இருப்பதுடன், நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் அன்றைய தினமும் எரிக்க வேண்டுமாம். அவ்வாறு இல்லையென்றால், அது உடம்பில் கொழுப்பாக தங்கிவிடும். இதன் காரணமாகவே உடல் பருமன் பிரச்சினை ஏற்படுவதுடன், குறித்த உடல் எடை பல உடல் தொந்தரவினையும் ஏற்படுத்துகின்றது.
பாதாம் உடல் எடையைக் குறைக்குமா?
பொதுவாக கொட்டைகளில் அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் காணப்படும் நிலையில், பாதாம் கொழுப்பையும், உடல் எடையும் குறைக்கும் தன்மை கொண்டதாம்.
பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பாதாமிில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான பொழுப்பு அதிகம் காணப்படுகின்றது. இவையே எடை இழப்பிற்கு உதவி செய்கின்றது.
பாதாம் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசியை தணித்து, அதிகமாக சாப்பிடுவதை தடுக்கின்றது. அதிக புரதம் கொண்ட பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், தொப்பையில் உள்ள கொழுப்பையும் குறைக்கின்றது.
தினமும் காலையில் பாதாமை நீங்கள் ஊறவைத்து சாப்பிட்டால் பல நன்மைகளை பெறுவதுடன் உடல் எடையையும் குறைக்கலாம். பாதாம் பொடியை கஞ்சி அல்லது பால் இவற்றில் கலந்து சேர்த்துக்கொள்ளலாம்.
எடையை குறைக்க நினைப்பவர்கள் பாதாமை ஷேக் அல்லது ஸ்மூத்தியில் கலந்து சாப்பிடலாம்.
இரட்டிப்பு ஊட்டச்சத்து கிடைப்பதற்கும் மற்றும் பசியையும் கட்டுப்படுத்தவும், எடை இழப்பிற்கு பாதாமை தாராளமாக எடுக்கவும். ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |