அருமையான மசாலா மோர் செய்து பார்க்கலாம் வாங்க!
கோடைக்காலம் வந்துவிட்டாலே உடலை குளிர்விப்பதற்காக எதையாவது குடிக்க வேண்டும் என்றுதான் தோன்றும்.
அதுவும் ஆரோக்கியமானதாக இருந்தால் கூடுதல் சிறப்பு.
சரி இனி மசாலா மோர் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மோர் மிளகாய் - 1
கெட்டித் தயிர் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
அரைக்க
கறிவேப்பிலை - 3 இலைகள்
பச்சை மிளகாய் - பாதி
இஞ்சி - 1/4 இன்ச்
செய்முறை
முதலில் தயிரை ஒரு பௌலில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் என்பவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, மோர் மிளகாய் என்பவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ளவற்றை மோரில் சேர்த்து, அதில் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் அதில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அருமையான மசாலா மோர் தயார்.