நயா பைசா செலவில்லாமல் வெள்ளையாகணுமா? அப்போ இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
தற்போது இருக்கும் பெண்கள், ஆண்கள் என இருப்பாலாரும் வெள்ளையாக வேண்டும் என ஆசையாக இருப்பார்கள்.
அதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு பொருட்களை வாங்கி சருமத்திற்கு பயன்படுத்துவோம்.
இப்படியான பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கெடுத்து விடுகின்றது.
இதன் விளைவாக இளமையிலேயே நீங்கள் முதுமையான தோற்றத்திற்கு எட்டி விடுவீர்கள். இது போன்ற பிரச்சினைகளை தடுக்க வேண்டும் என்றால் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்துங்கள்.
வெள்ளையாகவும் மாறலாம் இந்த வெள்ளை நிரந்தரமாக நம்மிள் இருக்கும். அந்த வகையில், பழங்காலத்தில் இருக்கும் பெண்கள் பருப்பு மாவு அல்லது பச்சை பயறு மாவு முகத்திற்கு போடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் பச்சை பயறில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன.
இது சருமத்தை பாதுகாத்து மென்மையாக்கும். மேலும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தழும்புகள் போன்றவை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படுத்தவும் உதவுகின்றது.
இதன்படி, பயித்தம் பருப்பு மாவைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று காண்போம்.
பயித்தம் பருப்பு ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்
- பயித்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதனை 5 நிமிடங்கள் வைத்து விட்டு உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
முகத்திற்கு போட்டு சரியாக தடவி 15-20 நிமிடம் காய வைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவைகள் சரி செய்ய வேண்டும். அப்போது தான் முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவு பெறும். நினைத்தால் போல் வெள்ளையாகவும் மாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |