சொகுசு கார் வாங்கியுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ்... குவியும் வாழ்த்துக்கள்!
சன் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பாகி வரும் 'மூன்று முடிச்சு' சீரியல் நடிகர் நியாஸ், புதிய சொகுசு கார் வாங்கி தங்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
மூன்று முடிச்சு சீரியல்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மூன்று முடிச்சு சீரியல் TRP-யில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

இயக்குநர் நந்தன் சி. முத்தையா இயக்கி வரும் இந்த சீரியலுக்கு ஆர். குமரன் திரைக்கதை எழுதி வருகிறார். இந்த சீரியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நாயகி சுவாதி கொண்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
மூன்று முடிச்சு சீரியலில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகர் நியாஸ் கான். இவர் இதற்கு முன் 'புதுப்புது அர்த்தங்கள்', 'சண்டக்கோழி' ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், மூன்று முடிச்சு சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க அவர் ஒரு நாளைக்கு ரூ. 14 ஆயிரம் சம்பளம் பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில்,தற்போது நடிகர் நியாஸ் புதிதாக சொகுசு கார் வாங்கிய காணொளியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |