வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.9250 சம்பாதிக்கணுமா? Post office வழங்கும் சூப்பரான திட்டம்!
பொதுவாகவே தற்காலத்தில் நாளுக்கு நாள் பணத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. எனவே பணத்தை சேமிப்பதை விட பணத்தை முதலீடு செய்வதே சிறந்தாக இருக்கும்.
பணத்தை சேமிக்கும் போது அதே பணம் தான் நம்மிடம் இருக்கும் அதற்கு பதிலாக ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதால் இன்னும் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் கூட்டுக் கணக்கு ஆரம்பிப்பதன் மூலமாக மாதம்தோறும் ரூ.9,250 வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கணப்படுகின்றது.
அதற்கு எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் மற்றும் அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.
வருமானத் திட்டம் 2024
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் 2024 மிகவும் பயனுள்ள ஒர் திட்டமாக பார்க்கப்படுகின்றது. அதில் முக்கியமாக விடயம் நீங்கள் எந்தத் தொகையை முதலீடு செய்தாலும் அதற்கான பாதுகாப்பு உறுதி செய்ப்படுகின்றது. இதனால் பணத்தை முழு நம்பிக்கையுடன் இந்த திட்டத்தில் போடலாம்.
குறித்த திட்டத்தின் கணக்கை நீங்கள் உங்கள் மனைவி, சகோதரர் அல்லது குடும்ப உறுப்பினருடன் கூட்டாகத் தொடங்கினால், உங்களுக்கான டெபாசிட் எல்லை அதிகரிக்கின்றது. அதனால் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கின்றது.
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும். குறித்த திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.5,55,000 வீட்டில் இருந்துக்கொண்டே சம்பாதிக்க முடியும்.
இந்த திட்டத்தில் பணத்தை மொத்தமாக டெபாசிட் செய்வதால் ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும். இந்தத் திட்டத்தில் தனிநபர் ஒரே கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்ய முடியும்.
இத்திட்டத்தில் கணவன் மனைவி சேர்ந்து கணக்கைத் ஆரம்பிக்கும் பட்சத்தில் வட்டியில் மட்டும் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும்.
தற்போது தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் 7.4 சதவீத வட்டி கொடுக்கப்படுகின்றது. கணவன் மனைவி சேர்த்து ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டியில் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
அதன் மூலம் நீங்கள் வைப்பு செய்த பணம் அப்படியே இருக்கும் பணத்தை சேமித்து வைப்பதை பார்க்கிலும் இந்த திட்டத்தில் இணைவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |