ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு இருக்கா? ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க
தற்காலத்தை பொருத்தவரையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகனை மேற்கொள்வதற்கு வங்கி கணக்கு இன்றியமையாதது. எனவே பல்வேறு காரணங்களுக்காகவும் வியாபார நோக்கம் கருதியும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கின்றார்கள்.
குறிப்பாக, தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் சம்பளத்தக்கு என தனியாக ஒரு வங்கி கணக்கை வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 சேமிப்பு கணக்குகளை பயன்படுத்துகின்றனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தால் அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த எல்லைகளையும் விதிக்கவில்லை என்பதால் ஒருவர் ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்.
ஆனால் உங்கள் வங்கி கணக்குகளில் இருந்து சரியான பரிவர்த்தனைகளை இடம்பெற்றால் எந்த பிரச்சினைகளும் இருக்காது. நீண்ட காலம் பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகள் இருந்தால் அதனை மூடிவிட வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிமுறையின் அடிப்படையில் எல்லா கணக்கையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
மேலும் பல வங்கிக் கணக்குகளைத் திறக்கும் போது குறிப்பிட்ட சில விடயங்கள் குறித்து கவனத்தில் எடுக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் சம்பளக் கணக்கைத் தவிர சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை வைத்திக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதைச் செய்ய தவறும் பட்டசத்தில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை வங்கி அரவிடும்.
கட்டணம் பிடித்தம் செய்யப்பட்ட பின்னரும் கூட குறைந்தபட்ச கணக்கை பராமரிக்காத போனால் வங்கி கணக்கு எதிர்மறையாகிவிடும். இது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தும் போது அதற்கான குறைந்தபட்ச பணம், வங்கியில் இருந்து பெறும் மெசேஜ் சேவைக்கான கட்டணம், டெபிட் கார்டு கட்டணம் போன்றவற்றை முறையாக பராமரித்துக்கொள்வது முக்கியம். தேவையான வங்கி கணக்குகளை மட்டும் பயன்படுத்துவன் மூலம் தேவையற்ற விதி மீறல்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |