Credit card பாவிப்பவரா நீங்க? ஜூன் 30 இன் பின்னர் ஏற்பட போகும் மாற்றம்
ஜூலை 1 முதல் Credit card பில் செலுத்துவது கடினமான விடயமாக மாறவுள்ளது. ரிசர்வ் வங்கி இதுதொடர்பான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதனை Credit card வைத்திருப்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம். ஜூலை 1 முதல், சில தளங்கள் மூலம் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் சிரமம் ஏற்படகூடும்.
CRED, PhonePe, BillDesk ஆகியவை ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால் பாதிக்கப்படக்கூடிய சில முக்கிய fintechs ஆகும்.
எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு பின்னர், அனைத்து Credit card கொடுப்பனவுகளும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் அதாவது பிபிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, இதுவரை 2 கோடி கிரெடிட் கார்டுகளை வழங்கிய ஹெச்டிஎஃப்சி வங்கி, 1.7 கோடி கிரெடிட் கார்டுகளை வழங்கிய ஐசிஐசிஐ வங்கி மற்றும் 1.4 கோடி Credit card வழங்கிய ஆக்சிஸ் வங்கி ஆகியவை பிபிபிஎஸ் இயக்கப்படவில்லை.
ஆனால், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள், பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் விதிமுறைகளை இன்னும் பின்பற்ற ஆரம்பிக்கவில்லை
மேலும் PhonePe, Cred, BillDesk, Infibeam Avenues ஆகிய நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றியுள்ளன. இதனால், இந்த நிறுவனங்களின் ஆப்களில் இருந்து, ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாத வங்கிகளின் Credit cardfளுக்கு கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு, விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட 34 Credit card வழங்கும் வங்கிகளில் தற்போது வரை வெறும் 8 வங்கிகள் மட்டுமே பாரத் பில் பேமெண்ட் முறையை பின்பற்றியுள்ளது.
குறிப்பாக, எஸ்பிஐ, கோடக் மகிந்திரா, ஃபெடரல் வங்கி, இண்டஸ்இண்ட், பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் மட்டுமே பிபிபிஎஸ் முறையை பின்பற்றுகின்றன.
அத்துடன் மோசடி பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கவும், தடுத்து நிறுத்தவும் Credit card பில் கட்டணத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆர்பிஐ முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |