அலர்ஜியா? Montek LC Tablet பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அலர்ஜி பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளில் ஒன்று Montek LC Tablet.
மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், அரிப்பு, கண்களில் நீர் கோர்த்தல், வீக்கம் போன்ற அலர்ஜி தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.
மேலும் சுவாச பாதைகளில் உள்ள தொற்றை குறைப்பதன் மூலம் சுவாசிப்பதில் உள்ள சிரமங்களை நீக்குகிறது.
உணவுடன் அல்லது உணவு இல்லாமல் மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
உங்களது உடல்நலனை பொறுத்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுகளில் பரிந்துரைக்கும் நாட்களில் எடுத்துக் கொள்ளவும்.
மாத்திரைகள் பயன்படுத்திய பின்னர் பக்கவிளைவுகள் இருந்தாலோ, பக்கவிளைவுகள் நீண்ட நாட்களுக்கு நீடித்தாலோ மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
பக்கவிளைவுகள்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- உதடு வறட்சி
- தலைவலி
- மயக்கம்
இது பொதுவான பக்கவிளைவுகளே, தானாகவே சரியாகக்கூடியது. இது நீடித்தாலோ, இன்னும் பிற பக்கவிளைவுகள் இருந்தாலோ மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
முக்கிய கவனத்திற்கு...
மாத்திரைகள் எடுத்துக்கொண்ட பின்னர் மயக்கம், தூக்க கலக்கம் இருக்கலாம் என்பதால் வண்டிகளை ஓட்ட வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் ஆல்கஹால் எடுத்துக்கொள்வதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
Montek LC மாத்திரைகளில் உடனடி தீர்வு கிடைக்கப்பெற தண்ணீர் அதிகளவு எடுத்துக்கொள்ளவும்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பில் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
முழு மாத்திரையாக எடுத்துக்கொள்ளவும், உடைத்தோ, மென்றொ சாப்பிட வேண்டாம்.
கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என கூறினாலும் மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுத்துக்கொள்ளவும்.
தாய்ப்பாலூட்டும் பெண்கள் மறந்தும்கூட எடுத்துக்கொள்ள வேண்டாம், இது குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டு பண்ணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |