கனடாவில் ஆண் ஓரினச் சேர்க்கைகயாளர்களை குறி வைத்து தாக்கிய குரங்கம்மை நோய்!
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஆண் ஓரினச் சேர்க்கைகயாளர்கள் என தெரியவந்துள்ளது.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் 25 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
குரங்கம்மை தொற்றாளிகளுடன் தொடர்பு பேணியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 முதல் 30 சந்தேகத்திற்கு இடமான தொற்று உறுதியாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாகாண பொதுச் சுகாதார இடைக்கால பணிப்பாளர் டொக்டர் லுக் பொய்லெயூ தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று தாக்கி நான்கு நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய்! விரிவான விளக்கங்களுடன்
நோய்த் தொற்றுக்கு இலக்காகியவர்களில் பலர் ஆண்கள் எனவும், இவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.